ரெமோ என்ற பெயர் தமிழ் கிடையாது என்பதால், அரசின் 30 சதவீத வரிச்சலுகை படத்துக்கு கிடைக்காது, அதனால் படத்தின் பெயரை ரெங்கநாதன் என்கிற மோகனா என மாற்ற உள்ளதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது.
ரெமோ என்ற பெயரை கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர். இதுவொரு பெயர்ச்சொல். சிவாஜி, ரோமியோ ஜுலியட் படங்களெல்லாம், அந்தப் பெயர்கள் பெயர்ச்சொல் என்பதால் வரிவிலக்கு பெற்றன. அந்தவகையில் ரெமோவுக்கும் வரிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.