கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:59 IST)
கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ
நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா தனது கணவருடன் கபடி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
நடிகை ரோஜா இன்று தனது நகரி தொகுதியில் உள்ள கபடி விளையாட்டு போட்டி ஒன்றை ஆரம்பித்து வைத்தார். டாஸ் போட்டு அவர் இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்ததோடு அவர் ஒரு அணியின் சார்பாக நின்று சில நிமிடங்கள் கபடி விளையாடினார் 
 
ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ரோஜாவுக்கு எதிரணியில் நின்று அவர் விளையாடினார். இருவரும் மாறி மாறி சில நிமிடங்கள் கபடி விளையாடும் காட்சிகள் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்