ரோபோசங்கர் மகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

ஞாயிறு, 13 ஜனவரி 2019 (09:36 IST)
சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது இயல்பான ஒன்றே. இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முதல் படத்திலேயே விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 
விஜய்யுடன் ஏற்கனவே 'புலி', 'படத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மகள் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63; படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவ்ந்துள்ளது

தளபதி 63 திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டி குறித்த படம் என்பதால் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து வீராங்கனையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 
ஏற்கனவே இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்