கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி தமிழ் முன்னணி நடிகர்கள் பலரை சகட்டு மேணிக்கு கிண்டலடித்து காமெடி பண்ணியிருப்பார். இதனால் கோபமடைந்த அந்த நடிகர்கள் ஆர்ஜே பாலாஜிக்கு எதிராக முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
சமீபத்தில் இவர் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிகர்கள் சிம்பு, அஜித், விஜய், சூர்யா என்று சரமாரியாக கிண்டல் செய்து நடித்தார். மேலும் கவலை வேண்டாம் படத்தில் நடிகர் தனுஷை நேரடியாகவே கிண்டல் பண்ணியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த முன்னணி நடிகர்கள் இயக்கனர்கள், தயாரிப்பாளர்களிடம் தங்கள் படங்களில் ஆர்ஜே பாலாஜியை நடிக்க வைக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இவர் நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என பெரிய நடிகர்கள் கூற ஆர்ஜே பாலாஜிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.