மாஸ் படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ரியாஸ்கான்

சனி, 1 நவம்பர் 2014 (11:45 IST)
தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் நடிகர் என்றால் அது ரியாஸ்கான்தான். நடிக்க வந்ததிலிருந்து இன்றுவரை அதனை மெயின்டெய்ன் செய்து வருகிறார். இந்த ஓல்டஸ்ட் சிக்ஸ்பேக், லேட்டஸ்ட் சிக்ஸ்பேக் சூர்யாவுடன் நான்காவது முறையாக இணைகிறார். படம் மாஸ்.
வெங்கட்பிரபு இயக்கும் இந்த ஹாரர் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா ஹீரோயின். கருணாஸ், ஸ்ரீமன், பிரேம்ஜி ஆகியோருடன் முக்கியமான வேடத்தில் பார்த்திபனும் நடிக்கிறார். இவர்களுடன் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ரியாஸ்கான்.
இதற்குமுன் ஸ்ரீ, கஜினி, ஆதவன் படங்களில் சூர்யாவுடன் நடித்திருந்தாலும் மாஸ் படம் ரொம்பவே ஸ்பெஷல். இதுவரை இதுபோன்ற வேடத்தில் நான் நடித்ததில்லை என ரியாஸ்கான் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்