ஒருநாள் கூத்து படத்தில் ஆர்ஜேவாக நடிக்கும் மெட்ராஸ் மேரி

செவ்வாய், 30 ஜூன் 2015 (16:08 IST)
மெட்ராஸ் மேரி என்றால்தான் பலருக்கும் தெரிகிறது. அந்தளவுக்கு ரித்விகாவின் மெட்ராஸ் படத்தின் கதாபாத்திர பெயர் பிரபலம். அதன் காரணமாகதான் ஃபிலிம்பேர் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது ரித்விகாவுக்கு கிடைத்தது.
தற்போது ஒருநாள் கூத்து படத்தில் ரித்விகா நடித்து வருகிறார். அட்டகத்தி தினேஷ் நடிக்கும் இதில் மெட்ராஸைப் போன்றே துணை கதாபாத்திரம் ரித்விகாவுக்கு. ஆர்ஜேவாக வருகிறாராம்.
 
இதற்காக சென்னையிலுள்ள எப்எம் ஒன்றுக்கு சென்று சில தினங்கள், ஆர்ஜேக்களின் நடவடிக்கைகளை கவனித்தாராம். 
 
உங்க ஹோம் வொர்க்குக்கு ஒருநாள் கூத்தும் வெற்றியை தேடித் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்