அப்பவனார் ரியோ ராஜ்.... இனிமேல் தொட்டது எல்லாம் தூள் தான் - குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (11:26 IST)
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

ரியோ பிரபலமாவதற்கு முன்னரே ஸ்ருதி அவரது நண்பராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார். பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரியோ.  பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ருதி கர்ப்பமானார். சமீபத்தில் தான் மனைவிக்கு பாரம்பரிய முறைப்படி  வளைகாப்பு நடத்தி அழகு பார்த்திருக்கிறார் ரியோ.


இந்நிலையில் நேற்று ரியோ - ஸ்ருதி தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்