சுஷாந்த் வழக்கு… ரியாவுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன்!

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:17 IST)
சுஷாந்தின் முன்னாள் காதலி ரியாவுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து விசாரணைக்கு வரசொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது தந்தை நடிகை ரியா மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது ரியாவுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்