3 வாரங்களுக்கு முன், ஆழ்வார்பேட்டையிலுள்ள அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் கமலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
சில தினங்கள் முன்பு, காந்தியார் போல் இருவர் உதவியுடன் நடந்தேன் என்று கமல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே, இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.