தியேட்டரில் வெளியாகிறது ‘பாகுபலி’ டிரெய்லர்

திங்கள், 13 மார்ச் 2017 (11:28 IST)
இந்தியாவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்து  விட்டார் இயக்குநர் ராஜமெளலி. வருகிற 16ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் காலை 9 மணியில்  இருந்து 10 மணிக்குள் வெளியாகிறது. 
 
முதன்முதலில் தியேட்டரில் டிரெய்லரை ரிலீஸ் செய்கின்றனர். அன்று மாலை, மும்பையில் நடைபெறும் விழாவில் ஹிந்தி  வெர்ஷன் வெளியிடப்படுகிறது. அன்று மாலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் யூ டியூபில் டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்