கேரளாவில் வெளியாகும் துருவங்கள் பதினாறு

சனி, 25 பிப்ரவரி 2017 (11:02 IST)
தமிழில் வெற்றி பெற்ற துருவங்கள் பதினாறு படம் விரைவில் கேரளாவில் வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிடுகிறவர்  படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனைப் போன்று 22 வயதேயான ஒரு இளைஞர்.

 
2016 இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம்  சம்பாதித்து தந்தது. தெலுங்கில் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர்.
 
கேரளாவில் துருவங்கள் பதினாறை வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுகிறவர், மகாவிஷ்ணு  கிருஷ்ணமூர்த்தி என்கிற 22 வயது இளைஞர்.
 
படம் கேரளாவிலும் பட்டையை கிளப்பட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்