சூரரைப் போற்று படத்தின் ‘’ஆகாசம்’’ என்ற பாடல் வெளியீடு… சூர்யா ரசிகர்களுக்கு கடிதம்

வியாழன், 22 அக்டோபர் 2020 (20:37 IST)
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்,.

இப்படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது.
 

எனவே சமீபத்தில் இப்படத்தில் சில நிமிட வீடியோ காட்சிகளும்  பின்னணி இசையும் சமூக வெளியிடப்பட்டு ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிச் சரித்திடம் படைத்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளதால் இந்திய விமாப்படை தரப்பில் இருந்து ஒப்புதல் வர சற்று தாமதமாகவே படக்குழு காத்திருக்கிறார்களாம்.

இக்கடிதம் வெளியான பிறகுதான் இப்படத்தை விளம்பரப்படுதும் பிரமோசன் வேலையில் படக்குழு ஈடுபடும் எனத் தெரிகிறது. இதனால் படவெளியீடு சற்றுத தாமதமாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் விமானம் சம்பந்தப்பட்டதால், இது குறித்து விமானபடை அதிகாரிகள் பார்த்துச் சொல்வதற்குச் சில தாமங்கள் ஆகிறது. இது தேசத்தின் பாதுக்காப்பின் பொருட்டுத்தான். எனவே விரைவில் இப்படத்தில் டிரைலருடன் சந்திப்போம் என்று கூறி, இப்படத்தில் ஆகாசம் என்ற நட்புகுறித்த பாடலை வெளியிட்டுள்ளார்.

இப்பாடல் வைரலாகி வருகிறது.

இப்பாடல் கீழே லிங்க் தரப்பட்டுள்ளது.

https://youtu.be/QdjUbGRiE1o

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்