ரெஜினாவின் கனவு கதாபாத்திரம் எது தெரியுமா?

புதன், 9 நவம்பர் 2016 (16:01 IST)
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ளார் ரெஜினா. இந்தப் படம் பற்றி அவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது.

 
எப்போதும் என்னுடைய கனவுப் பாத்திரம் என்ன என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருப்பேன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மரியம் கதாபாத்திரம் அதைப் பூர்த்தி செய்துள்ளது. செல்வராகவன் சாரின் நம்பிக்கைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
 
இந்தப் படத்தில் பணக்கார குடும்பத்தின் குழந்தையை கவனித்துக் கொள்ளும் மரியம் என்ற வேலைக்கார பெண்ணாகவும், பேயாகவும் ரெஜினா நடித்துள்ளார். படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்