'விக்ரம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார் உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

புதன், 30 மார்ச் 2022 (18:03 IST)
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சற்று முன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து வலிமை, பீஸ்ட் படத்தை அடுத்து விக்ரம் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்