மீண்டும் இணையும் வருத்தப்படாத வாலிபர்கள்

வியாழன், 16 ஜூன் 2016 (16:47 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ஆரம்பகால படங்கள் வெற்றி பெற்றாலும் அவரை ஸ்டாராக உயர்த்தியது, வருத்தப்படாத வாலிபர் சங்கம்.


 


பொன்ராம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகே சிவகார்த்திகேயன் மாஸ் நடிகருக்கான அந்தஸ்தை பெற்றார். 
 
அதன் பிறகு பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் நடித்தார். பல மாதங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப் படமும் ஹிட். அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்தார் பொன்ராம். நான் எழுதியிருக்கும் கதைக்கு லாரன்ஸ் பொருத்தமாக இருப்பார் என கூறவும் செய்தார். 
 
ஆனால், சமீபத்திய தகவல்கள் வேறு மாதிரி உள்ளன. லாரன்சை பொன்ராம் இயக்கவில்லை. பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையே இயக்க உள்ளார். ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். அது முடிந்ததும் வருத்தப்படாத வாலிபர்களின் கூட்டணி அமையும் என்கிறார்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்