மீண்டும் இணையும் பெல் பாட்டம் கூட்டணி… இந்தி ராட்சசன் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:43 IST)
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ராட்சசன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் அக்‌ஷய் குமார்.

ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசன்". சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இப்படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்கட சினிமாவில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அதே போல் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்தில் நடிகர் அக்ஷரகுமார் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே அக்‌ஷய் குமாரை வைத்து பெல் பாட்டம் படத்தை இயக்கியுள்ள ரஞ்சித் திவாரியே இந்தி ராட்சசன் படத்தையும் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்