இழுத்துக் கொண்டே செல்லும் கேம்சேஞ்சர் ஷூட்டிங்… ஷங்கர் மேல் அதிருப்தியில் ராம்சரண்!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:35 IST)
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். இந்தியன் 2 இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் கேம்சேஞ்சர் படத்தை முடிப்பதில் இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதனால் அந்த படத்தின் ஹீரோ ராம்சரண் இயக்குனர் ஷங்கர் மேல் இப்போது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கேம்சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்