ராம் கோபால் வர்மாவின் அட்டாக்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (17:15 IST)
மாதத்துக்கு ஒரு படம் என்ற டயரியாவிலிருந்து ராம் கோபால் வர்மா இன்னும் மீளவில்லை.


 

கில்லிங் வீரப்பன் படத்தை இயக்கிக் கொண்டே, தனது இன்னொரு படமான, அட்டாக்கின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.
 
அட்டாக் படத்தில் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்துள்ளார். சி.கல்யாண் படத்தை தயாரித்துள்ளார். தொடர்ச்சியாக டப்பா படங்கள் எடுப்பதற்கு, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒரு டப்பா காரணம் சொன்னார், வர்மா. 
 
அதாவது, இதுவரை எடுத்து வந்த கதை, திரைக்கதையிலிருந்து விலகி, பரிசோதனை முயற்சியாக படங்களை தற்போது எடுத்து வருவதாக அவர் கூறினார். ஆனால், அட்டாக் அதிலிருந்து மாறுபட்டு, ரசிகர்களுக்குப் பிடித்தவகையில் எடுத்ததாக அவர் கூறினார்.
 
வர்மாவின் உழைப்பு, இந்த பரிசோதனைகள் முயற்சிகளில் சீரழகிறதே என்று அடிக்கடி அவரை தொந்தரவு செய்து கொண்டிருப்பேன். இந்தப் படத்தின் மூலம் அவர் தனது வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என்றார், தயாரிப்பாளர் சி.கல்யாண்.
 
வர்மா ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்