இந்தியில் மென்டல் திரைப்படத்தை இயக்கும் வர்மா

செவ்வாய், 3 மார்ச் 2015 (16:02 IST)
இந்தியில் தொடர் தோல்விகளை தந்த ராம் கோபால் வர்மா, இந்தியை தவிர்த்து தெலுங்குக்கு வந்தார். மாதம் ஒரு படம் என்ற கணக்கில் அவர் உற்பத்தி செய்து தள்ளிய படங்கள் வர்மா மீது வைத்திருந்த மதிப்பை குறைத்து சர்ச்சைக்கு மட்டுமே வழிவகுத்தன.
 
இந்நிலையில் மீண்டும் இந்திக்கு திரும்புகிறார் வர்மா.
 
அவர் இந்தியில் இயக்கப் போகும் படத்தின் பெயர், மென்டல். சைக்கலாஜிகல் த்ரில்லர். இந்தப் படத்துக்குப் பிறகு ட்ரிபிள் எக்ஸ் என்ற படத்தை இயக்கப் போகிறாராம்.
 
மென்டல் அவர் தெலுங்கில் உற்பத்தி செய்தவைகளைப் போன்று இல்லாமல் இருக்க வர்மா ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொள்வது நலம்.

வெப்துனியாவைப் படிக்கவும்