நடிகை ரகுல் பிரீத் சிங் ஸ்பைடர் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சம் தொடும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு கைகொடுத்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்தான்.
தற்போது சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரகுல் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரகுல் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகள் நடித்தாலும், அவர்களைக் காரணம் காட்டி எனது ரோலை டைரக்டர்கள் டம்மியாக்கவில்லை. அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்தப் படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என கூறியுள்ளார்.