சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள், டீஸர், கதாபாத்திரங்களின் போஸ்டர் என அனைத்தும் படு ஹிட். சூப்பர் ஸ்டார் ஈஸ் பேக் என்று பெரும் உற்சாகத்தில் உள்ள ரசிகர்கள் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் இதுதான் கதை, அதான் கதை என நிறைய உலா வருகிறது. இப்போதும் அப்படி ஒரு கதை வைரலாகிறது. அதாவது படம் இந்து, முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை என்று கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை எனினும், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான "சர்கார்" படத்தின் கதையும் இப்படித்தான் ரிலீசுக்கு முன்னரே பரவியது. பிறகு படம் வெளியாகியதும் அதே கதையாக தான் இருந்தது.