கோச்சடையானின் வெற்றிவிழாவில் ரசிகர்களை சந்திப்பேன் என்று படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூறிய ரஜினி, படம் வெளியானதைத் தொடர்ந்து, எல்லோரும் திரையரங்கில் படத்தைப் பார்த்து என்ஜாய் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
நேற்று கோச்சடையான் வெளியானதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரு ட்வீட்கள் செய்தார் ரஜினி. முதல் ட்வீட்டில், என் மகள் சவுந்தர்யாவுக்கும், கோச்சடையான் குழுவுக்கும் வாழ்த்துகள்.. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று கூறியிருந்தார்.
இரண்டாவது ட்வீட்டில் கோச்சடையான் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.