செப்டம்பர் 18 மலேசியாவில் தொடங்கும் ரஜினி படம்

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (12:09 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 18 -ஆம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது.
 

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரஜினி வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதற்காக அவர் வெண்தாடி வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாயகியாக ராதிகா ஆப்தே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இசை சந்தோஷ் நாராயணன்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 18 -ஆம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. ரஞ்சித் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை மலேசியா சென்று தேர்வு செய்துள்ளார். 
 
இந்த படப்பிடிப்பில் ரஜினி, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்