ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்திற்கு காரணம் இதுவா?

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (11:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல முதன்மை  நீதிமன்றத்தில் டிசம்பர் 23ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

 
ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவுக்கும் தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு அவரது கணவர்  அஸ்வின் ராம்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
 
இதனை தொடர்ந்து செளந்தர்யா சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இது திரை உலகத்தினர் இடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பிரிவுக்கு காரணம் சௌந்தர்யா தான் என்று கூறப்படுகிறது. சௌந்தர்யா  மிகவும் கோபக்காரராம். ஈரோஸ் நிறுவனத்தில் சௌந்தர்யா பணியாற்றிபோது அங்கிருக்கும் பணியாளர்கள் அவரைப்பார்த்து  பயப்படுவார்களாம்.
 
அதே போல் திருமணத்திற்கு பிறகு அஷ்வினின் குடும்பத்தினரிடமும் அப்படி நடந்து கொண்டடதால், ஒரு தருணத்தில்  பொறுமை இழந்த அஷ்வின் இனி சரிப்பட்டு வராது, பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி  இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்