காலா படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

வியாழன், 25 மே 2017 (12:29 IST)
இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு காலா (கரிகாலன்) என பெயரிடப்பட்டுள்ளது.


 

 
கபாலி வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் கை கோர்க்கிறார். பொதுவுடைமை சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் ரஞ்சித். எனவேதான், கபாலி படத்தில் மலேசியாவில் பணிபுரியும் ஏழை தமிழர்களுக்காக பாடுபடும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.
 
அதேபோல், காலா படத்தில் மும்பையில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட தமிழக மக்களுக்காக போராடும் ஒரு போராளியாக ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  அதை உணர்த்தும் வகையில்தான், இன்று வெளியான ‘காலா’ போஸ்டரில் படத்தின் பெயரிலும், ரஜினியின் மீதும் சிவப்பு வண்னம் பூசப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு சென்று செட்டிலான தமிழர்களின் வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்யும் என ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் அடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்