ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

BALA

புதன், 8 ஏப்ரல் 2026 (13:04 IST)
விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதத்தில் கிடைக்காததால் படம் ரிலீஸாகவில்லை.

அதன்பின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். ஆனால், ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் வழக்கில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து தணிக்கை வாரியத்திற்கு எதிரான வழக்கை தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார்.. அதோடு படத்தின் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்.. அது நடந்து  இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.. ஆனால் இப்போதும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை..

எனவே, ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என கணிக்கப்படுகிறது.. இந்நிலையில்தான் இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் ‘ஜனநாயகன் பட பிரச்சனை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘ Sorry.. கருத்து சொல்ல விரும்பவில்லை' என கூறிவிட்டு ரஜினி சென்றுவிட்டார்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்