தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே.விஸ்வநாத் அவர்களுக்கு ரஜினி வாழ்த்து

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (23:18 IST)
பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு நேற்று இந்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற கே.விஸ்வநாத் அவர்களுக்கு கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.



 


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சற்று முன்னர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே.விஸ்வநாத்ஜி அவர்களுக்கு எனது சல்யூட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவிற்கும் கே.விஸ்வநாத் அவர்கள் ரஜினியை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை. இருப்பினும் நண்பர் கமலின் இயக்குனர் என்று மட்டுமின்றி இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்ற முறையில் கே.விஸ்வநாத் அவர்களுக்கு தனது மனமார்ந்த  வாழ்த்துக்களை ரஜினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்