ரஜினி அரசியலுக்கு தகுதியற்றவர்... சர்ச்சை பேச்சுக்கு சரத்குமார் விளக்கம்

புதன், 18 ஜனவரி 2017 (11:52 IST)
ரஜினி அரசியல் கட்சி தொடங்க தகுதியற்றவர், அவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்பேன் என்று சரத்குமார் சொன்னது பெரும்  சர்ச்சையாகியிருக்கிறது. பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் சரத்குமாரின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில், தான்  சொன்னது குறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 
சோ நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய ரஜினி, தமிழகத்தில் அசாதாரண நிலை நிலவுவதாக குறிப்பிட்டார். அது குறித்து  நிருபர்கள் தன்னிடம் கருத்து கேட்டதாகவும், ஏன் அப்படி ரஜினி சொன்னார் என்று அவரைத்தான் கேட்க வேண்டும் என்று  பதிலளித்ததாக சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று தனது கருத்தை சரத்குமார் சொன்னதும், நிருபர்கள், அப்படியானால் ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என் கேட்டதாகவும், ரஜினி இனியவர்,  என் நண்பர். ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று தனது கருத்தை சொன்னதாகவும் சரத்குமார் கூறியுள்ளார். இதைத்தான் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாத இணையதளம் மிகைப்படுத்தி, ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான்  சொன்னதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இது உண்மைக்கு புறம்பானது என்று சரத்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்