கபாலி படம் : ரஞ்சித்திற்கு முத்தங்கள் கொடுத்து பாராட்டிய ரஜினி

வியாழன், 21 ஜூலை 2016 (16:05 IST)
கபாலி படத்தை பார்த்த ரஜினி, அப்படத்தின் இயக்குனருக்கு முத்தங்கள் அனுப்பி பாராட்டியுள்ளார்.


 

 
கபாலி படம் நாளை உலகமெங்கும் 5000 திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. ரஜினி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இதனால், அங்கு அவருக்கு ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
நேற்று, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அந்த படத்தை பார்த்து ரசித்தார் ரஜினிகாந்த். படம் முடிந்ததும், அவருடன் படம் பார்த்த அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்து ரஜினிக்கு வாழ்த்துக்கள் கூறினர்.


 

 
படம் சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி அடைந்த ரஜினி, படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இதுபற்றி  தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித் “மகிழ்ச்சி.. சூப்பர்ஸ்டார் நிறைய முத்தங்களை அனுப்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்