தமிழகத்தில் 400 திரையரங்குகளில் கோச்சடையான்

திங்கள், 5 மே 2014 (11:22 IST)
மே 9 கோச்சடையான் வெளியாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையானை திரையிட திரையரங்குகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 400 திரையரங்குகள் கோச்சடையானை திரையிட முன்வந்துள்ளன.
ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் ஆறாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 200 -க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. கேரளாவில் 250, கர்நாடகாவில் 150 என பிற மாநிலங்களிலும் அதிகளவு திரையரங்குகள் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 400 திரையரங்குகள். அதிகபட்சமாக கோவையில் 80 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. சென்னை மற்றும் புறநகர்களில் 36 திரையரங்குகள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 
கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா, தீபிகா படுகோன், ஆதி, சரத்குமார், ருக்மணி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுத சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்