#சங்கிரஜினி... தகர டப்பாவ பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணினாலும் இரும்பு சட்டி ஆக முடியாது...!

சனி, 8 பிப்ரவரி 2020 (14:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
 

 
இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. தற்காலிகமாக ரஜினி 168 என அழைக்கப்படும் இப்படத்திற்கு அண்ணாத்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூகலைத்தளங்களில் பரவி வந்தது. மேலும், வருகிற ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் இப்படத்தில் நயன்தாரா வக்கீல் ரோலில் நடிக்கிறார் கூறப்பட்டது. 
 

 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினியின் லுக் என கூறி புதிய கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ரஜியின் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டாலும் நெட்டிசன்களால் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ட்விட்டர் வாசி ஒருவர்  "தகர டப்பாவ பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணினாலும் இரும்பு சட்டி ஆக முடியாது"  என ரஜினியின் வயதையும் அவரது தோற்றத்தையும் கிண்டல் செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்