எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம் - இது ரஜினியின் லிங்கா பஞ்ச்

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (21:03 IST)
லிங்கா படத்தில் பஞ்ச் வசனம் என்று தனியாக எதுவுமில்லை. ஆனால் ரஜினி பேசுகிற ஒவ்வொரு வசனமும் பஞ்சாக இருக்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார். 


 
 
அந்த பஞ்ச் -களில் ஒன்று தற்போது கசிந்துள்ளது.
 
பஞ்ச் வசனம் என்றால் அதை பேசுகிறவர் குறிப்பிட்ட வசனத்தை இடம் பொருளுக்கு ஏற்ப அடிக்கடி பயன்படுத்த வேண்டும். ரஜினியின் பஞ்ச் வசனங்களான இது எப்படி இருக்கு, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, என் வழி தனி வழி... எல்லாம் படத்தில் பலமுறை இடம்பெறும். லிங்காவில் அப்படி எந்த பஞ்சும் கிடையாது. ரவிக்குமார் சொன்னது போல அவர் பேசுகிற வசனங்களில் பஞ்ச் வசனத்துக்குரிய டெப்த் இருக்கும்.
 
லிங்காவில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். அதில் ஒருவர் கலெக்டர். மக்களின் பயன்பாட்டுக்காக அணை கட்ட முயல்கிறார். அதற்கான ஆதரவை கேட்கிறவர், எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியனாக இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க என்று சொல்வது போன்ற வசனம் இடம்பெறுகிறது. இதேபோல் பல்வேறு அழுத்தமான பஞ்ச் வசனங்கள் பேசுவதாக குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ரவிக்குமார் வடிவமைத்துள்ளார்.
 
படம் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்