மீண்டும் தள்ளிப்போகும் இந்தியாவின் மிக பிரம்மாண்ட படம்!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:49 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலிஸ் தேதி அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் பல்வேறு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் பட ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்