பிரபாஸின் பேன் இந்தியா திரைப்படத்தில் நடிகராக ராஜமௌலி?

புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:24 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாப்ய் நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் ராஜமௌலி பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமௌலி பிரபாஸ் நடிக்கும் கல்கி ஏடி 2898 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கி ஏடி 2898 படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்