"முத்தையா என்னிடம் கதை சொன்ன போது, குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும், உங்களுக்கு எப்படின்னு தயங்கி கேட்டார். இதை கேட்க என்ன தயக்கம்? எந்த கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமோ அவர்களை நடிக்க வைங்க. இதுவரை நாங்க சேர்ந்து நடிச்சதில்லைன்னு சொன்னேன்.
அவ்வளவுதான். சங்கம் வேறு நடிப்பு வேறு. சங்கம் வேறு தொழில்வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். 'இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்' என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக்குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை" என்றார் விஷால்.
சரத்குமார் தலைமையிலான சங்க நிர்வாகிகளை எதிர்த்து போட்டியிட்டால் சங்கம் உடையும், பொறாமை வளரும், இருதரப்பும் சேர்ந்து நடிக்க மாட்டார்கள் என்று ஆவேசப்பட்ட சேரன், செல்வமணி எல்லாம் இப்போது என்ன சொல்கிறார்கள்...?