ராதாமோகனின் புதிய படம் உப்பு கருவாடு

ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (09:49 IST)
கௌரவம் படத்தின் தோல்விக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்ட ராதாமோகன் பழைய உற்சாகத்துடன் அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார். படத்துக்கு உப்பு கருவாடு என்று பெயர் வைத்துள்ளார்.
 
பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் மட்டுமே படம் பண்ணிக் கொண்டிருந்தவர் உப்பு கருவாடை வேறு நிறுவனத்துக்கு பண்ணுவதாக பேச்சு. நடன இயக்குனர் சதீஷ், நந்திதா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்