சரமாரி கேள்வி எழுப்பிய காஜல் பசுபதி; அதிர்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர்கள்!

சனி, 19 ஆகஸ்ட் 2017 (12:02 IST)
தற்போது பிக்பாஸ் வீட்டில் புது வரவுகள் சிலர் வர தொடங்கியுள்ளனர். இதில் நேற்று புதுவரவாக நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

 
கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் பிந்து மாதவி களமிறக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு  முன் நடிகை சுஜா வருணியும், நேற்று முன் தினம் சிந்து சமவெளியில் நடித்த ஹாரிஷ் கல்யாணும் புதிதாக களமிறங்கினர்.  இந்நிலையில் அடுத்த வரவாக நேற்று நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆட்டோவில் எண்ட்ரி கொடுத்தார்.

 
பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் பங்கேற்ப்பாளர்கள் அனைவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். காயத்ரியை பார்த்து நானும் உங்களை மாதிரிதான், மனசுல பட்டதை முகத்துக்கு நேரா பேசிடுவேன் என்று கூறினார். பிந்துவை பார்த்து "எல்லாம்  தெரிஞ்சும் இத்தனை நாள் சும்மாவே இருக்கிறாயே, ஏதாவது செய்” என்று கிண்டல் செய்தார். குறிப்பாக ஆரவிடம் ஓவியா  விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என்றும் உலகமே விரும்பும் ஒருவரை உங்களுக்கு ஏன்  பிடிக்கவில்லை என்று பல கேள்விகளை எழுப்பினார்.
 
காஜல் பசுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, ஏராளமான படங்களில் நடிகையாக நடித்துள்ளார். வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என உறுதியாக கூறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்