பார்க்கிறதுக்கு சீனியர் சிட்டிசன், ஆனால் பேனர் வைப்பவர்களுக்கு அவர் டெரர் சிட்டிசன். விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால், அது அதிமுக வைத்த ஜெயலலிதா பேனராக இருந்தாலும் டர்ர்ர்தான்.
ஜாஸ் வெளியிட்ட படமாச்சே... போலீஸ் பம்மியிருக்கிறது. மூணு நாளில் எடுத்திடறோம் என்றிருக்கிறார்கள் பேனரை வைத்தவர்கள். மூணு மணிநேரம்கூட இருக்கக் கூடாது என்று ராமசாமியே பேனரை கிழிக்க, நல்லவேளையாக போலீஸ் இருந்ததால் ரஜினி ரசிகர்கள் அவரை புரட்டியெடுக்காமல் தப்பித்தார்.