காட்பாடி ரயில் நிலையத்தில் புறம்போக்கு படப்பிடிப்பு

திங்கள், 17 நவம்பர் 2014 (09:09 IST)
புறம்போக்கு படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு இரு தினங்கள் முன்பு காட்பாடி ரயில் நிலையத்தில் தொடங்கியது.
 
இந்தப் படத்தில் ரயல்வே கலாசியாக விஜய் சேதுபதி வருகிறார். அவர் ஆடிப்பாடும் நடனக் காட்சியை காட்பாடி ரயில் நிலையத்தில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். இங்கே இன்னும் சில தினங்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
 
விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நாயர் நடித்து வரும் புறம்போக்கு படத்தில் சிறை ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் சிறை போன்று பிரமாண்ட அரங்கு அமைத்து காட்சிகளை எஸ்.பி.ஜனநாதன் படமாக்கினார்.
 
படத்தின் எண்பது சதவீத வேலைகள் முடிந்துவிட்டதாக படயூனிட் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்