மே மாதம் திரைக்குவரும் புறம்போக்கு

திங்கள், 30 மார்ச் 2015 (12:26 IST)
எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் புறம்போக்கு மே மாதம் திரைக்கு வருகிறது.
 

 

 
இயற்கை, ஈ, பேராண்மை என்று மூன்று படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் ஜனநாதன். வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகும் இவரது படங்கள் பொதுவுடமை சித்தாந்தத்தை நினைவுப்படுத்துபவையாக இருக்கும். புறம்போக்கும் அதே சிவப்பு கலரில்தான் தயாராகியுள்ளது.
 
ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நாயர் நடித்துள்ள இந்தப் படத்தை யுடிவியும், ஜனநாதனின் பைனரி ஃபிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஏப்ரலில் பாடல்களை வெளியிட்டு மே மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்