தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள தொடரி, ஆண்டவன் கட்டளை படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துள்ளன. தொடரி கடந்த வியாழக்கிழமையும் ஆண்டவன் கட்டளை வெள்ளிக்கிழமையும் திரைக்கு வந்தன. இதனால் இரண்டு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளங்களில் வந்ததால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது.