இணையதளத்தில் வெளியான மாஃபியா....படக்குழுவினர் அதிர்ச்சி !

வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (17:27 IST)
இணையதளத்தில் வெளியான மாஃபியா....படக்குழுவினர் அதிர்ச்சி !

’மாஃபியா’ படத்தின்  ஹெச்.டி பிரிண்ட் முதல் நாளிலேயே சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடுத்து இன்று வெளியாகியுள்ள படம் மாஃபியா.  துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலமாய், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கார்த்திக் நரேனின் அடுத்த படமாக வெளியாகி உள்ளது மாஃபியாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
 
இந்நிலையில், இன்று, மாஃபியா வெளியான நிலையில், அப்படத்திற்கு நல்ல விதமான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் முதல் நாளிலேயே இணயதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்