கதை சொல்வதாக வீட்டுக்கு அழைத்து அந்த மாதிரி படத்தைப் போட்ட தயாரிப்பாளர்! அலறி ஓடிய நடிகை!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:22 IST)
தெலுங்கு நடிகையான பயல் கோஷ் தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

தேரோடும் வீதியிலே  என்ற தமிழ்படத்தில் அறிமுகமான நடிகை பயல் கோஷ் அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் மும்முரமாக நடித்து வந்தார். ஆனால் அங்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகின. இந்நிலையில் அவர் தனக்கு சினிமாவில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளர் கதைவிவாதம் செய்யவேண்டும் என வீட்டுக்கு அழைத்துள்ளார். இவரும் சென்ற போது டி வி யில் அந்த மாதிரி படங்களை ஓடவிட்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை அலறியடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாராம். இதை சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்