பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் மரணம்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:40 IST)
1941ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பஞ்சு அருணாசலம். பின்னர், அவரே பல திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும் உள்ளார்.
 

 
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், கல்யாணராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
 
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார்.
 
ஆனந்த விகடனில் தற்போது ’திரைத்தொண்டர்’ என்ற தொடரை எழுதி வந்தார். கடைசி வரை தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து வந்ததற்கு சரியான உதாரணம் இது. தான் தயாரித்த அன்னக்கிளி திரைப்படத்தில், இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்