இதை மட்டும் செய்தால் கொரோனவை ஒழித்துவிடலாம் - டிப்ஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

சனி, 14 மார்ச் 2020 (15:14 IST)
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுக்காக்க தங்களால் முடித்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் உலகம் முழுக்க உள்ள மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக தங்களை பாதுகாத்து வருகின்றனர்.

இதில் நிறைய பேர் சில பல மருத்துவ டிப்ஸ்களை கொடுத்து வருகின்றனர். அந்தகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
"உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும்  வணக்கத்திற்கு மாறுங்கள். இது பழைய நாகரீகம் என்றாலும் இது தான் தற்போதைக்கு  உலக மக்கள் அனைவரையும் பாதுக்காக ஒரே சிறந்த வழி” என கூறி தான் கைகூப்பி கூப்பிட்ட புகைப்படங்களின் வீடியோ தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட அவரது ரசிகர்கள் பிரியங்கா சொல்வதை கடைபிடிப்போம் கொரோனவை ஒழிப்போம் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

It’s all about Namaste

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்