35 வயதாகும் நடிகை பிரியங்கா சோப்ரா, 25 வயது ஆகும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கிடையே 'பாரத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் பாப் பாடகர் நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இரு குடும்பத்தினர் முன்னிலையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் நிலையில், மேலும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பிரியங்காவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான 'கிரிஷ்', 2013ம் ஆண்டு வெளியான 'கிரிஷ் 3' படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'கிரிஷ்' படத்தின் நான்காம் பாகத்தில் மீண்டும் ஹிரித்தி ரோஷனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு பிரியங்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் 'கிரிஷ்' பட வரிசையில் பிரியங்கா இணைவது இது மூன்றாவது முறையாக அமையும். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், 2020ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.