தனுஷ் படத்தில் கதாநாயாகியாகும் பிரியா பவானி சங்கர்!

வியாழன், 15 ஜூலை 2021 (10:14 IST)
தனுஷ் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்திருக்கிறார். அதையடுத்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த மூன்று கதாநாயகிகள் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது. நித்யா மேனன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார். மூன்றாவதாக இப்போது நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்