ஜெயம் ரவி ஜோடியாகிறார் ப்ரியா பவானிசங்கர்!

வியாழன், 6 ஜனவரி 2022 (19:35 IST)
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஜெயம்ரவி நடித்த பூலோகம் என்ற திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும், ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே தன்யா ரவிச்சந்திரன் காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்த வாரம் முதல் பிரியா பவானி சங்கரின் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்