நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இப்போது அவர் தெலுங்கு சினிமா நடிகர்களின் சங்கமான மா எனப்படும் மூவி ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகளாக தான் தெலுங்கு படங்களில் நடித்து வந்தும், தன்னை தோற்கடிக்க அந்நியனாக காட்டி வெற்றி பெற்றுள்ளனர். இதை வாக்களித்தவர்களும் ஏற்றுள்ளனர். இதனால் என்னால் அவர்களுடன் இருக்க முடியாது என்பதால் நான் விலகுகிறேன். ஆனால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். எனக் கூறியுள்ளார்