இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய் இப்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் அந்த படத்துக்கு கவுண்டமணியின் பிரபலமான வசனமான டேய் தகப்பா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.